பாகிஸ்தான்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல் தற்போது வலுபெற்று வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தற்போது சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த போருக்கு காரணமாக உள்ளவர்கள் டி டி பி தெஹ்ரிக் இ தாலிபான் என்ற இயக்கத்தினர். இவர்களின் நோக்கம் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது போல பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்த்து தாலிபான் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.
டி டி பி இயக்கத்தினர் பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் பத்திக மாகாணத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல அப்பாவி பெண்கள் குழந்தைகள் என கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தது ஆப்கானிஸ்தான். இதனால் தற்போது இது இரு நாட்டின் போராக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு சில எல்லை பகுதிகளை கைப்பற்றிய நிலையில் தற்போது எல்லையை தாண்டி நாட்டுக்குள் தாக்குதல் நடத்த உள்ளதாக கூறியுள்ளனர். அதுவும் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தாக்குதல் நடத்த போகிறோம். அதனால் அங்கு வேலை செய்யும் போது மக்கள் வேறு இடத்திற்கு 3 மாதங்கள் சென்று விடுங்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளனர். இந்த செய்தி தற்போது பாகிஸ்தானுக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.