ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களின் ஒன்றான திரு கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில்.
இதைதொடர்ந்து கும்பாபிஷேக திருவிழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சில பூஜைகளுடன்தொடங்கியது.முதலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவிற்கு கேரளா தமிழகத்தில் இருந்த கோடான கோடி பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஜூலை ஆறாம் தேதி அன்று அதிகாலை 5.15 மணி அளவில் இருந்து 6.50 மணிக்குள் கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருக்கின்றார்கள்.
இன்று(6/7/2022) கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணி மிகச்சிறப்பாக நடந்தது. மேலும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்தார்கள்.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமம் பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சணா நமஸ்காரம், உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்ச வாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 மணி முதல் 5.50 மணி அளவில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6:00 மணி முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு திரு ஆதிகேசவ பெருமாள் தரிசனத்தை பெற்றார்கள். .