பொங்கல் பண்டிகை முடிந்து தொடர்ச்சியாக 12 நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு!!

0
113
After the Pongal festival, 12 consecutive working days have been announced!!
After the Pongal festival, 12 consecutive working days have been announced!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் தமிழக அரசு 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு மொத்தம் ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறையில் அறிவுள்ள நிலையில் அதனை தொடர்ந்து 12 நாட்கள் வேலை நாட்களாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது ஜனவரி மாதத்தில் மொத்த விடுமுறையை தாண்டி ஜனவரி 17ஆம் தேதியும் ஒருமுறை நாளாக அறிவித்ததை ஒட்டி அதற்கு மாறாக மற்றொரு நாளை வேலை நாளாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே ஜனவரி 20 முதல் 31 வரை 12 நாட்கள் கட்டாய வேலை நாட்களாக அமைக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை விட்டதை அடுத்து இதற்கு பதிலாக ஜனவரி 25ஆம் தேதி ஆன சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இன்றி பள்ளிகளுக்கும் கட்டாய வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 அன்று குடியரசு தினம் என்பதால் அன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருப்பதால் அந்நாளும் பள்ளி வேலை நாட்கள் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!
Next articleராஜினாமா செய்த கனடா பிரதமர்!! கொண்டாடும் பாஜக வினர்.. அதற்கான காரணம் என்ன??