சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!

0
248
#image_title

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சாலையோர கடைகளில் பலாப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பலாப்பழ சீசன் இருக்கும். அப்போது பண்ருட்டி, கொல்லிமலை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரிக்கு பலாப்பழ வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, பெங்களுரு ரோடு சாலையோர கடைகளில் பலாப்பழ வரத்து அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது பண்ருட்டி சுற்றுவட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கியுள்ளது.

இவர்கள் கடந்த, 8 ஆண்டுகளாக சீசன் துவங்கியவுடன் கிருஷ்ணகிரியில் மூன்று மாதங்கள் தங்கி பலாப்பழங்கள் விற்பனை செய்கிறார்கள். ஓசூரில் இருந்து பூக்கள் எடுத்துச் செல்லும் பிக்கப் வேன்களில் திரும்பி வரும் பொழுது பலாப்பழங்களை ஏற்றி வந்து இறக்கிக் கொள்கின்றனர் .

மூன்று மாதங்களில் அவர்களுக்கு, 45 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை இலாபம் கிடைக்கும்.
தற்போது தான் சீசன் துவங்கியுள்ளது வரும் காலங்களில் வரத்து மேலும் அதிகரிக்கும்.

பலாப்பழங்கள் எடையிடப்பட்டு கிலோ, 30 ரூபாய்க்கும், பலாச்சுளைகள் கிலோ, 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleசமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!
Next articleமதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !