இந்த தேதிக்கு பிறகு இவர்களின் ஆதார் அட்டை செல்லாது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!
இந்தியர்களின் அடையாளமாக தற்பொழுது ஆதார் கார்டு விளங்கும் நிலையில் அனைத்திடங்களிலும் இதன் முக்கியத்துவம் முதன்மை வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு தொடங்குவது என தொடங்கி அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் உள்ளது.
அவ்வபோது ஆதார் அட்டையை அப்டேட் செய்வது குறித்து அரசிடமிருந்து அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் வரும் 14-ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. மேற்கொண்டு அப்டேட் செய்யாதவர்கள் 14-ஆம் தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்தி மாற்றம் செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதனிடையே அப்டேட் செய்யாத நபர்களுக்கு ஆதார் அட்டையானது ரத்து செய்யப்படும் என்ற தகவலும் தீயாக பரவி வந்தது. இந்த அறிவிப்பு குறித்து மக்கள் குழம்பிய நிலையில் இது குறித்த ஆதார் மையமானது தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் 14-ஆம் தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்தி ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படும் என்ற தகவல் வருந்தியென கூறியுள்ளனர். எனவே ஆதார் அட்டை ரத்து என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.