திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!

0
132
#image_title

திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!! அடடா இவங்கதானா அது!!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா, ரெஜினா கெசான்ட்ரா இவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படம் நடிகர் அஜித் நடிக்கும் 62வது திரைப்படம் ஆகும்.

விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்.

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடிகை திரிஷா அவர்கள் நடிக்கின்றார். மங்காத்தா, ஜி, கிரீடம், என்னை அறிந்தால் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு 5வது முறையாக நடிகை திரிஷா அவர்கள் நடிகர் அஜித் அவர்களுடன் நடிக்கவுள்ளார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி அவர்கள் இரண்டாவது கதாநாயகியாக நடக்கவிருந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதால் அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி அவர்களுக்கு பதிலாக நடிகை ரெஜினா கெசான்ட்ரா அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது அஜர்பைஜானில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க மூன்றாவதாக ஒரு நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அந்த மூன்றாவது கதாநாயகி வேறு யாரும் இல்லை. நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் தான் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் முதன் முறையாக நடிகர் அஜித் அவர்களுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

Previous articleஇனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!
Next articleஎத்தன குண்டு போட்டாலும் ஜப்பான அழிக்க முடியாதுடா!!! இணையத்தில் வைரலாகும் ஜப்பான் படத்தின் டீசர்!!!