தமிழகத்தில் மற்றொரு கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வின் முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் சரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பனையம் வைத்து மக்களுக்காக கொரோனாவில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது கருணாவின் இரண்டாவது அறையில் அதிகமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்கள் இறந்துவருகின்றனர். அதில் 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போரூரை சேர்ந்த மருத்துவர் கார்த்திக்கும் கார்த்திகா என்ற பெண் மருத்துவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
கார்த்திகா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். திடீரென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட கார்த்திகாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நிலைமை தீவிரம் அடையவே மேல் சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளனர். எங்கு தேடி அலைந்தும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த கார்த்திகா நேற்று அதிகாலை அளவில் உயிரிழந்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
இதேபோல் சண்முகப்பிரியா அனுப்பானடி 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் தொடர்ந்து பணிக்கு வந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.