வங்கதேசம்: வங்கதேசத்தின் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் நடத்தி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்த போரட்டத்தின் எதிரொலியாக ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதை அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யுனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது.
பங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தபட்டது. கோயில்களும் தொடர்ந்து தாக்கப்படுவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று கோயில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளனர். காளி கோயிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளனர். உள்ள போலந்கந்தா காளி கோயிலில் ஒரு சிலையும் மைனஸிங் மாவட்டம் சாக்குவாய் பகுதியில் உள்ள பந்தர்வாரா கோயிலில் இரண்டு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் போலந்கந்தா கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான அமீர்புதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர் விசாரணை செய்தனர். அமீர்புதின் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கோயில் கமிட்டி தலைவர் ஜனார்த்தன்ராய் வலியுறித்தினார்.