மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

மீண்டும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய சம்பவம்! பகுதியில் பெரும் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட சாதி குறித்து கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் வசித்து வருபவர் டி கோபி (45) இவர் சேலம் பெரியார்பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த மே மாதம் முதல் பதிவாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும்  இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி. இவர் பெரியார் பல்கலைகழகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார்.

மேலும் சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சேலம் பல்கலைக்கழக வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று மாலை பதிவாளர் கோபி அந்த மாணவியின் போன்நிற்கு  அழைப்பு விடுத்து ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாகவும் அதற்காக உடனடியாக பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில்அவர்  தங்கியிருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி கோபி தங்கி இருக்கும் குடியிருப்புக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அந்த மாணவியின் உறவினர்கள் விடுதிக்கு வெளியவே  காத்திருக்கும் படியும் மாணவி மட்டும் குடியிருப்புகள் வரவேண்டும் என்று பதிவாளர் கோபி கூறியுள்ளார். மேலும் அந்த மாணவியும் தனியாகவே சென்றுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி பதிவாளர் கோபி இந்த மாணவிக்குபாலியல் தொடர்பான தொல்லைகள் கொடுத்ததாகவும் அதிர்ச்சி அடைந்த அலறி கொண்டு அந்த மாணவி வெளியே ஓடி வந்தார்.மேலும்  அங்க காத்திருந்த அந்த மாணவியின் உறவினர்களிடம்    நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

மேலும் அதைக் கேட்டு ஆத்திரமடைந்த நம் மாணவியின் உறவினர்கள் கோபியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும்  இதுகுறித்து போலீசில் அந்த மாணவி பதிவாளர் கோபியின் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கோபியை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்போது பதிவாளர் கோபி தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை ,பெண்களை சீண்டுதல், தொடர்ந்து தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவாளர் கோபியின் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இதைத்தொடர்ந்து நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்தனர். கருப்பூர் போஸ்ட் நிலையத்தில் கோபியிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் பதிவாளர் கோபிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தற்போது மாணவிக்கு தொல்லை கொடுத்த வழக்கில் பல்கலைக்கழகப் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.