வயதானவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்தால் நோய் பாதிப்பு சிரமமின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.வயதில் மாற்றம் ஏற்படுவது போல் நம் உணவுமுறை பழக்கத்திலும் வயதிற்கேற்ற மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
இளமை காலத்தில் உட்கொண்ட உணவை வயதான பிறகு ஆசைப்பட்டாலும் உட்கொள்ள முடியாது.காரணம் வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் இருக்கும்.வயதான பிறகு சர்க்கரை நோய்,இரத்த சோகை,ஊட்டச்சத்து குறைபாடு,எலும்பு பலவீனம்,மூட்டு வலி,பல் விழுதல் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.முதுமை கால உணவில் வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வயதானவர்கள் பெரும்பாலும் சந்திக்க கூடிய விஷயமாக இருப்பது கால்சியம் பற்றக்குறை.உடலில் கால்சியம் சத்து குறைவும் பொழுது மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி,முதுகு தண்டு வலி,கழுத்து வலி,முழங்கால் வலி,இடுப்பு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஆகவே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தினசரி வாழ்வில் அங்கமாக்கி கொள்ள வேண்டும்.இது தவிர இரும்பு,பொட்டாசியம்,மெக்னீசியம்,சோடியம்,துத்தநாகம் போன்ற சத்துக்களும் அவசியமான ஒன்றாகும்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்:
1)பால் மற்றும் பால் பொருட்கள்
2)மீன் வகைகள்
3)கீரைகள்
4)சோயா பொருட்கள்
5)பாதாம் பருப்பு
50 வயதை கடந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.70 வயதை கடந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 1200 மில்லி கிராம் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
1)பேரிச்சம் பழம்
2)முட்டை
3)கோழி
4)உலர் பழங்கள்
50 வயதை கடந்த அனைவரும் தினசரி வாழ்வில் 8 மில்லி கிராம் இரும்புச்சத்தை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
துத்தநாகம் நிறைந்த உணவுகள்:
1)பீன்ஸ்
2)பால் பொருட்கள்
3)முழு தானிய உணவுகள்
4)கோழி இறைச்சி
5)பழங்கள்
50 வயதை கடந்தவர்களுக்கு தினசரி வாழ்வில் 40 மில்லி கிராம் துத்தநாகம் தேவைப்படுகிறது.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:
1)சால்மன் மீன்
2)ஆரஞ்சு பழம்
3)பால்
4)கீரை
5)பருப்பு வகைகள்
6)உலர் விதைகள்
50 வயதை கடந்த ஆணிற்கு தினசரி 3400 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.அதேபோல் பெண்களுக்கு 2600 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:
1)பச்சை இலை காய்கறி
2)பீன்ஸ்
3)முழு தானிய உணவுகள்
ஆண்களுக்கு தினசரி 420 மில்லி கிராம் மெக்னீசியம் தேவைப்படுகிறது.பெண்களுக்கு 320 மில்லி கிராம் மெக்னீசியம் சத்து தேவைப்படுகிறது.
சோடியம் நிறைந்த உணவுகள்:
1)முட்டை
2)பழங்கள்
3)பால்
4)காய்கறிகள்
50 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் தினசரி 2300 மில்லி கிராம் சோடியம் தேவைப்படுகிறது.வைட்டமின் டி சத்தை சூரிய ஒளி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
எண்ணையில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள்,மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.கொழுப்புசத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.