இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

0
121
#image_title

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

இன்று முதல் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரிக்கும். இதையடுத்து மே 10ம் தேதிக்கு பிறகு வெயில் இன்னும் அதிகமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

மே மாதம் 4ம் தேதி அதாவது இன்று தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் மே 29ம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் உச்சக் கட்ட வெயிலை நாம் சந்திக்க போகிறோம். இந்த அக்னி நட்சத்திரம் இருக்கும் காலத்தில் வெயில் 100 டிகிரி முதல் 107 டிகிரி வரை அதிகரிக்கும். இதையடுத்து மே 10ம் தேதிக்கு பிறகு இன்னும் வெயில் அதிகரிக்கப் போகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் மட்டும் வெப்பம் சற்று தணிந்து உள்ளது. இதற்கு மத்தியில் வரும் மே 7ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறவுள்ளது என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புயல் கரையை கடந்த பின் மே 10ம் தேதிக்கு பிறகு மீண்டும் வெயில்அதிகரிக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.