ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!

Photo of author

By Sakthi

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!
ஆந்திர மாநிலத்தில் 100000 விவசாயிகளுக்கு  அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவசமாக பட்டா வழங்கியுள்ளார். இதனால் ஆந்திர மாநில விவசாயிகள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் செய்த இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார். இது வரையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இதையடுத்து 100000 விவசாயிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவச பட்டாக்களை வழங்கியுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 2.06 ஏக்கர் புள்ளியிடப்பட்ட நிலங்களை சுமார் 100000 விவசாயிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவச பட்டா போட்டு கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் “20000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 2,06,170 ஏக்கர் நிலங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். இதனால் 97471 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளது. நிலமற்றவர்கள் பிரச்சனைக்கு இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.