வரட்டு இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

0
97
#image_title
வறட்டு இருமலால் இரவு தூக்கம் இல்லாமல் கஷ்டமா! இந்த மருந்தை தயார் செய்து குடிங்க!
நம்மில் பலருக்கு இருமல் தொந்தரவு இருக்கும். அதுவும் குளிர்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல் இரவு நேரங்களில் நம் தூக்கத்தை கெடுத்து நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்கவிடாது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வந்தால் அது நம் மார்பு பகுதியிலும் தொண்டை பகுதியிலும் வலியை ஏற்படுத்தும். இந்த வறட்டு இருமல் பிரச்சனையை மூன்று நாட்களில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வறட்டு இருமல் பிரச்சனையை சரி செய்யும் மருந்தை தயார் செய்யும் முறை;
அடுப்பை பற்ற வைத்து அதில் அகண்ட பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் மிளகு காரமாக இருக்கும் என்றால் பத்து மிளகு எண்ணி இதில் போட்டுக் கொள்ளலாம். பிறகு இதை ஈரம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து இதில் பத்து கிராம்பு சேர்த்துக் கொள்ளவும். இதையும் ஈரம் போகும் அளவு வறுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்து வைத்துள்ள மிளகு மற்றும் கிராம்பை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இஞ்சி ஒன்றை எடுத்து அதன் சாறு மட்டும் பிளிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு இஞ்சி சாறு வேண்டும். அதற்கு ஏற்றவாறு இஞ்சியை பிளிந்து கொள்ளுங்கள்.
அடுத்து அரைத்து வைத்துள்ள கிராம்பு மிளகு பொடியில் அரை ஸ்பூன் பொடியை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிளிந்து வைத்துள்ள அரை ஸ்பூன் இஞ்சி சாற்றை எடுத்து வைத்துள்ள அரை ஸ்பூன் பொடியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் அளவிற்கும் குறைவாக மஞ்சள் பொடியை இதில் சேர்த்துக் நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த மருந்தை பெரியவர்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சாப்பிடலாம். சிறுவர்கள் அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து சாப்பிடலாம். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.
இரவு தூங்கச் செல்லும் முன்பு இந்த மருந்தை சாப்பிட்டு படுக்க வேண்டும். இதை சாப்பிட்ட நாளே நிம்மதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.
இரண்டாவது வைத்தியம்;
இது மாதிரி இருமல் உள்ள சமயங்களில் அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பத்து துளசி இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து இந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி லேசாக தட்டி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏலக்காயையும் இதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இதமான சூட்டிற்கு வந்தவுடன் இதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அப்படியே குடிக்கலாம்.
இது இருமல் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும். இதை இரவு நேரங்களிலும் குடிக்கலாம். பகல் நேரங்களிலும் குடிக்கலாம்.
மூன்றாவது வைத்தியம்;
அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் அளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்று பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து இந்த பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் அளவு மிளகுப் பொடியை இதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கால் ஸ்பூன் அளவிற்கும் குறைவாக இதில் மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளவும். நன்கு பாலை கொதிக்க வைக்க வேண்டும். இதில் சேர்த்த பூண்டு பற்கள் வேகும் வரை பால் கொதிக்க வேண்டும். பூண்டு வெந்த பின்னர் இதை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளவும். இது குடிக்கும் பதத்திற்கு சூடு ஆறிய பிறகு சுவைக்காக சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
இந்த பாலில் சேர்த்த பூண்டு பற்களையும் நீங்கள் சாப்பிட வேண்டும். இதை இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன்பு தயார் செய்து குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும். இந்த மருத்துவங்களில் ஏதேனும் ஒன்றை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தும் இருமல் போகவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.