அட.. இந்த முறை கண்டிப்பா நாங்கள் ஜெயிப்போம்!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

Photo of author

By Gayathri

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியிருக்கிறார். அப்பொழுது இந்த முறை சட்டசபை தேர்தலில் தங்களுக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நிச்சயமாக தாங்கள்தான் ஜெயிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர் திமுக குறித்து கூறியிருப்பதாவது :-

கல்வி கடன் ரத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் நேரலை என திமுக அரசு கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்ததோடு தங்களுடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளை வெள்ளை அறிக்கையாக திமுக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், ஏன் இன்னும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியதோடு, தெலுங்கானா மாநிலமானது மத்திய அரசின் உதவி இன்றி தன்னிச்சையாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை முடித்துள்ளது என்றும் அதேபோன்று தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உரிமை இல்லை என மேலும் மேலும் தெரிவிக்க வேண்டாம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.