ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!
இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது.
இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது அவரை பலரும் சாடி வருகின்றனர். மேலும் இன்று அதிமுக பொன்விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியின் போது பேசிய அவர் கட்சியில் இருந்த பெரிய தலைவர்கள் எல்லாம் அதாவது பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் காணாமலே போய்விட்டார்கள்.
அதாவது எங்கு இருக்கிறார்கள் என்று கூட இடம் தெரியாமல் ஆகிவிட்டார்கள். அவர்கள் இருக்கும் போது பெரிய இயக்கமாக அதிமுக செயற்பட்டதன் காரணமாக, நான் மீண்டும் சொல்கிறேன். மக்களுக்கு நிஜமாக இருந்த அவர்களாலேயே ஒன்றுமே செய்ய முடியாத பட்சத்தில், சசிகலா என்பவர் அதிமுகவை பொறுத்த வரை ஒரு நிழல்பிம்பம். உங்களால் அதிமுகவை ஒன்றுமே செய்யமுடியாது என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.