பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை-3.!! மூன்று நாள் வசூல் குறித்த தகவல்.!!

0
304

அரண்மனை-3 படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் நிறைய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இதனையடுத்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி அரண்மனை-3 திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், நளினி, நந்தினி, மனோபாலா, சம்பத், அமித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளர். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி உள்ளார்.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் அரண்மனை 3 திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை காப்பாற்றியுள்ளது. அதன் காரணமாக அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அரண்மனை-3 திரைப் படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் வெளியான மூன்று நாளில் தமிழ்நாடு முழுவதும் 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleசென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!
Next articleஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here