அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

0
146
AIADMK celebrates golden jubilee year today

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார்.

MGR ன் மறைவிற்கு பின் பல போராட்டங்களுக்கு பின் இந்த ஆட்சியை மேனும் ஒருங்கிணைத்தார் புரட்சி தலைவி ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு அவரது மறைவிற்கு பின் கட்சி பல போராட்டங்களையும், பிளவுகளையும் சந்தித்தது.

தற்போது கட்சி மீண்டும் இணைந்து OPS மற்றும் EPS தலைமையில் கட்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று அக்டோபர் 17ந் தேதி அதிமுக கட்சி 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. OPS மற்றும் EPS MGR மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலையிட்டு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளனர். அதனை தொடர்ந்து பல நலத்திட்ட பணிகளும் செய்கின்றனர்.

 

 

 

 

 

Previous articleகேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?
Next articleஇன்றைய (17-10-2021) ராசி பலன்கள்.!! புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை.!!