அதிமுக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற எம்.பி பதவி வகித்தவர் அன்வர் ராஜா. இவர் ஆரம்பம் முதலே பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் அதிமுக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என்று பேட்டி கொடுத்தார்.
பாஜவுடன் இணைவது மிகப்பெரிய தோல்வியில் போய் முடியும் என்கிற மாதிரியான கருத்துக்களை அண்மையில் அன்வர் ராஜா தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவை விட்டு திமுகவில் இணைகிறார் அன்வர் ராஜா என்னும் செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அன்வர் ராஜாவை அதிமுகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி உள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியையும் பழனிசாமி பறித்துவிட்டார். இதனால் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.