அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுகவில் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதிமுக-வில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் சீனிவாசன்,  கோபாலகிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாணிக்கம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஜே.சி.டி.பிரபகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன் உள்பட 11 பேர் ஆவர்.

அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பரபரப்பான தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.  நேற்று தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகாவின் முதலமைச்சர் வேட்பாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் என அனைவரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்றனர். அங்கே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

Leave a Comment