ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!
மதுரையில், அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக வரும் 20ஆம் ஞாயிற்றுக்கிழமை) தேதி நடைபெறுகிறது. அதே நாளில் திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதால், அரசியல் மோதல் ஏற்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அஇஅதிமுக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடத்த இருப்பதாக அக்கட்சி அறிவித்தது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்ற கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் ஆளும் திமுக கட்சியினர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்; மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரே நாளில் அதிமுகவின் கட்சி மாநாடும் அதே 20ஆம் தேதி திமுகவின் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளதால் மதுரையில் இரு கட்சிக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோதலும்; கலவரமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மாநாடு நடைபெறும் பகுதிகளில் காவல்துறை தரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தாலும், அதிமுக தரப்பில் 1,500 தனியார் பாதுகாவலர்களின் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.