அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

Photo of author

By Vijay

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்றும் அதனை விரைவில் வெளியிட போவதாகவும் கடந்த சில மாதமாக கூறி வந்த நிலையில், நேற்று காலை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை முதல் பாகம் என்ற பெயரில் வெளியிட்டார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் இது வரை ஆட்சி செய்த அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சொத்து பற்றிய விவரங்களையும் வெளியிட போவதாக தெரிவித்ததை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலையும், அதே சமயத்தில் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது.

அதிமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் காட்டமான பதில் அளித்துள்ளார், நேற்று அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி என்றும், இதில் அதிமுகவை சேர்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம் ,அவசரத்துல அண்டாக்குள்ள கையை விட்ட கை போகாதுன்னு சொல்வாங்க , அண்ணாமலை முதலில் பதட்ட படாமல் அரசியல் செய்ய வேண்டும் என  அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.