தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்றது அறிக்கையில் தற்போது திமுக அரசின் செயல்பாடுகளை கவனிக்கும்போது ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏமாறுவதற்கு ஆள் இருக்கின்ற வரையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் 100 நாள் செயல்பாடு கையிலேயே ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரையில் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் தற்சமயம் பசப்பு வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய உயர்கல்விக்கான கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுகவினர் அதை மறந்தே போய்விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
தற்சமயம் நடந்துவரும் அரசியல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பல நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக்கூடாது என நினைக்கும் அளவிற்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது,
கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்ற எல்லோருக்கும் கடன் ரத்தாகும் என மகிழ்ச்சி அடைந்து இருந்த சூழலில் 2018ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் பெறப்பட்ட நகைகளை மட்டுமே தள்ளுபடி செய்வது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என சொல்லப்படுகிறது .இதனை செயல்படுத்துவதற்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படும் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கு கடன் பெற்றவர் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற்று இருக்க இயலாது, மத்திய மாநில அரசு ஊழியராக இருக்கக்கூடாது, வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, வருட வருவாய் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய நபராக இருக்கக்கூடாது, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தாலும் நிபந்தனைகளால் பல பொது மக்களால் கடன் தள்ளுபடி சலுகை பெற இயலாது கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலமாக இவற்றை தெரிந்து கொண்ட பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வழிகளில் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடியதைப் போல இந்த அரசை பொதுமக்கள் குறை கூறத் தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் கடன் அளவு எவ்வளவு என்று தேர்தல் நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை எல்லாம் அறிந்து தான் நிறைவேற்ற இயலாத 505க்கும் மேலான வாக்குறுதிகளை திமுக தலைவர் பேசியிருக்கின்றார். இருந்தாலும் அதனை நிறைவேற்ற நினைக்காமல் நிதி அமைச்சர் அவர்களை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில் ஒவ்வொரு வருடமும் அம்மா அரசில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வெளியிட்ட நிதி அறிக்கையில் தொகுப்பாகவே இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதோடு இந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்கு பதிலாக இவ்வளவு இருக்கிறது. என்பதை கண்டுபிடித்தது போலவும் இதன்காரணமாக நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்த பல நிபந்தனைகள் விதிக்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று தெரிவித்துக் கொள்ளும் திமுக அரசு அவர்களுடைய பண பயனில் கை வைப்பதும் தேர்தல் அறிவிப்புகளில் 1,2 நிறைவேற்றுவதாக தெரிவித்து அதிலும் புதுப்புது நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆகவே திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்களை இனியும் ஏமாற்றாமல் அவர்கள் விழித்துக்கொண்டு போராட்ட களத்தில் குதிப்பதற்கு முன்பாக அதிர்ஷ்டத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னைப் பிரித்துக் கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். அதோடு 5 பவுன் நகையை அடமானம் வைத்து நகை கடன் வாங்கியவர்கள் கடன்களையும், உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.