அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிக்கையில் சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி பகல் 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிற என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களும் தவறாமல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிந்து அதோடு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சட்டசபை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 14ஆம் தேதியன்று தலைமை கழகத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால் நோய் தோற்று காரணமாக, அன்றைய தினம் அதிமுக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் தலைமை செயலகத்திற்கு வருகை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்0 அதோடு தலைமை கழக வளாகத்தில் கடந்த சட்டசபை உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.