அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!

0
142

அதிமுகவில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிக்கையை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.

அந்த  அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

“அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள்,அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 9.45 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது” என்று இபிஎஸ் ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?
Next articleசூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!