தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதனை அடுத்து மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்வு செய்த பிறகு அவர்கள் எவ்வாறு மதிப்பெண் வழங்க இருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
மாணவர்களுடைய எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்ற காரணத்தால், இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் திடீரென்று எடுத்து விட இயலாது. சிபிஎஸ்சி தேர்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதற்கு முன்னதாகவே எல்லாம் தேர்வு நோய்த்தொற்று முற்றிலுமாக குறைந்த பின்னர் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவுகள் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை குறித்து நாளை நடைபெற இருக்கின்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.