அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! என்ன நடக்கும்?

0
178

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழு செல்லாது, ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியின் தொடர வேண்டும் என்று உத்தரவு பிரப்பித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி சுந்தரமகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது இதில் தனி நீதிபதி ஜெயிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத சூழ்நிலையில், இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது.
இரு தலைவர்களும் ஒன்றிணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கி வைத்து விடும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இந்த சூழ்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். ஆகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தங்களது தரப்பை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம் ஆர் ஷா, கெய்ஷணா முராரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால பொதுச் செயலாளர் இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது இதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமானது என்றும், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தான் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.

கட்சியின் பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. ஆகவே அதன் முடிவே இறுதியானது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Previous articleஅதிமுக தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது! டிடிவி தினகரன் அதிரடி!
Next articleபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!