அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்த அதிமுக பொது குழுவின் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட கோரி இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இதனை கடந்த வாரம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றம் விதித்திருந்த பத்து நாள் கெடு வரும் சனிக்கிழமை உடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் தேர்தல் ஆணையத்தின் ஆணையர் கூட்டம் நடைபெறும்.
உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை இல்லை என்றால் வரும் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.