அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்காக வாக்கு சேகரித்த விஐபி!

Photo of author

By Sakthi

அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்காக வாக்கு சேகரித்த விஐபி!

Sakthi

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் வரவிருக்கும் காரணத்தால், தமிழகத்தில் அரசியல் நிலைமை பரபரப்படைந்தது இருக்கிறது.முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல அதிமுக மற்றும் திமுக ஆகிய இருபெரும் கட்சிகளில் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் வேட்பாளர்களுக்கு மிக நெருங்கிய முக்கிய புலிகளும் அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம் தான் ஆனால் தன்னுடைய தந்தைக்காக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மகள் பிரியதர்ஷினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருப்பது எல்லோரையும் கவர்ந்து இருக்கிறது.

அந்த சமயத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்ததாவது, தொற்று காலத்தில் எங்களுடைய உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் மக்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த உரிமையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக எங்களுக்காக உழைப்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். உங்களுடைய அரசு விவசாயிகள் மாணவர்கள் பெண்கள் என்று எல்லோரையும் பாதுகாக்கும் என தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.