BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது!

0
96
BREAKING Tomorrow's full blockade fight! Buses do not work!
BREAKING Tomorrow's full blockade fight! Buses do not work!

 BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளையுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வர பட்டுள்ளதாக லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு நடிகர்,இயக்குனர் என அனைவரும் ஆதரவு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஜனவரி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்ட்டர் போராட்டத்தை நடத்தினர்.அது பெருமளவு கலவரத்தை  ஏற்படுத்தியது.இந்த போராட்டம் தொடங்கிய 11 நாட்களிலே நாடு தழுவிய முழு அடைப்பு தொடங்கியது.அப்போதும் அனைத்து மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நம் தமிழ்நாட்டில் திமுக மட்டும் தான் தன் ஆதரவு குரலை எழுப்பியது.இந்த போராட்டம் தற்போது நான்கு மாதங்கள் நிறைவேறும் நிலையில்,நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடக்கப்போகிறது.இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பாஜக-வுடன் அதிக நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஆந்திர மாநில அமைச்சர் கூறுகையில்,விசாகப்பட்டினம் எக்கு ஆலையை  தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும்,நாளை நடக்க இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும் நாங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்போம் எனக் கூறினார்.மாநிலத்தில் எக்கு ஆலையை நிறுவதற்கு தெலுங்கு மக்கள் மாபெரும் தியாகங்களை செய்துள்ளனர்.அதனால் நாங்கள் எக்கு ஆலையை தனியார் மயமாக்க விடமாட்டோம் எனக் கூறினார்.

இந்த போராட்டமானது பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடத்தபோவதாகவும்,விவசாயிகளின் சங்கங்களோடு இணைந்து ஓய்எஸ்ஆர் கட்சி அமைதியான முறையில் போர் கொடிடி தூக்கும் எனக் கூறினார்.மேலும் நாளை மதியம் 1 மணிக்கு பிறகு அனைத்து அரசு பேருந்துகளும் இயங்கும் எனவும்,அனைத்து அவசர சுகாதார சேவைகள் தடையின்றி நடக்கும் எனக் கூறினார்.