அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு!

Photo of author

By Rupa

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு!

Rupa

AIADMK has betrayed! P. Chidambaram's action speech!

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குளறுபடியே நடக்கிறது.இதற்கிடையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னால் மத்திய நிதிமந்திரியும்,காகிராஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பல்வேறுப் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடியில் பா.சிதம்பரம் பரப்புரை ஆற்றினர்.

அப்போது பேசிய பா.சிதம்பரம் முதல்வர் பழனிசாமி நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என்றார்.மேலும் கூவத்தூர் செல்லும் வரை பழனிசாமி என்ற அமைச்சர் இருப்பதே தமக்கு தெரியாது என்றார்.மேலும் ஆலங்குடி தொகுதியில் 60 நாட்களுக்கு முன் மாற்றுக்கட்சியிலிருந்து வந்த வேட்பாளர் ஒருவரை அறிவித்து அதிமுக அவரது தொண்டர் வேட்பாளருக்கே துரோகம் செய்த்துவிட்டது என்றார்.