இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக!

0
80
Candidate scores 6 to get youth votes! AIADMK wants to keep ice and get votes!
Candidate scores 6 to get youth votes! AIADMK wants to keep ice and get votes!

இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் கொஞ்சம்நெஞ்சம் கிடையாது.அதே போல் இரு தினங்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் வாக்கு சேகரிப்பின் போது சாலையில் நடந்து வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிட தக்கது.

அவரைப்போல மநீம கட்சியின் தலைவரும் சாலைகளில் நடந்தும்,பேருந்துகளில் சென்றும் வாக்கு கேட்டார்.அதுமட்டுமின்றி இவர் கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் சென்று மக்களின் வாக்குகளை பெற நினைத்தார்.இவருக்கு எதிராக அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் ஆட்டோவில் சென்று தனது பரப்புரையை நடத்தினார்.

இருவருக்கும் இடையே நடந்தது ஆட்டோ ஓட்டப் பந்தயம் என பலர் கிண்டல்,கேளி செய்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சம்பத்குமார் வாக்கு சேகரிக்கும் போது அங்குள்ள ஒரு பகுதியில் பீடி தயாரிக்கும் பெண்களிடம் சென்று அவரும் அமர்ந்து பீடிக்கு நூல் கட்டியது பெரும் வைரலாகியது.இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

இவர் இன்று பொழிச்சலூரில் வாக்கு சேகரிக்க சென்றார்.அப்போது அங்கு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.அவரும் அந்த இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.மேலும் அதிமுகவிலுள்ள இளைஞர் நலத்திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.