முன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!

Photo of author

By Sakthi

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை ஒட்டி 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பாக 73 வகையான சீர் வரிசைகளுடன் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி அதிமுக என்பதற்கு இந்த திருமண மேடை ஒரு மிகப் பெரிய சாட்சி என்று தெரிவித்திருக்கிறார். வருடம் தோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று திருமணங்கள் நடத்தப்படுகின்றன அதிமுகவில் மட்டும் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருமண உதவித் திட்டம், மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக 6010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உதவிகளை வழங்கி வருகின்றது. இதுவரையில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 249 அம்மா இரு சக்கர வாகனங்கள் மகளிருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஓ எஸ் மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், போன்ற அமைச்சர்கள் பங்கேற்றார்கள் 123 ஜோடிகளுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தன்னுடைய சொந்த செலவில் 73 வகையான சீர்வரிசைகள் வழங்கியிருக்கின்றார்.