சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

0
401

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

 

இதனையடுத்து இந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ வரை படித்துள்ள 19 வயது வாலிபர் ஒருவர் தான் அவர்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

புகாரை பெற்று கொண்ட காவல் துறை அதிகாரிகள் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleமுன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!
Next articleஅவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here