அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!
அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா தனி கட்சி தொடங்க ஆரம்பித்துவிட்டார்.
கட்சி இரண்டாக பிரிந்தது.பிறகு அவர் ஆரம்பித்த கட்சியிலிருந்தும் விலகுவதாக கூறினார்.மீண்டும் எப்பொழுது தங்களது அரசியல் பயணத்தை தொடங்குவீர்கள் என்று ஊடகங்கள் தொடர்ந்து அவரை கேள்வி கேட்டு வந்தது.இவர் மெளனம் காத்தபடியே ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.தற்போது ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வெண்கல வேலை காணிக்கையாக செலுத்த வந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அதில் அவர் கூறியது,அதிமுகவை கைப்பற்றுவது எனது நோக்கம் அல்ல.
அதிமுக வும் எங்களுடைய கட்சி தான்.நான் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்.திமுக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டுகள் ஆகிவிட்டது.இருப்பினும் அவர்களது ஆட்சியில் மக்கள் திருப்தி அடையவில்லை.குறிப்பாக திமுக வந்த பிறகு மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.விவசாயிகளுக்கு 1லட்சம் இலவச மின் இணைப்பை தந்தகா திமுக கூறி வருகிறது.அவ்வாறு அளித்தும் அது பயனற்றதாக தான் உள்ளது.ஏனென்றால் அவர்களுக்கு மின்சாரமே வரவில்லை.மின்சார தட்டுப்பாடு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.அதே போல குடும்ப அட்டை தளைவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்குவதாக கூறி இருந்தார்கள்.
ஓர் ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை தரவில்லை.அதேபோல முதியோர் கான உதவித்தொகையும் தரப்படவில்லை.இந்த குறைபாடுகள் ஏதும் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறவில்லை.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து காவல்நிலையங்களில் திமுக பிரமுகர்களை அதிகப்படியான குவிகின்றனர் என்ற புகாரும் வந்த வண்ணமாக தான் உள்ளது. இதனையெல்லாம் திமுக அரசு கவனித்து கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்து ஏற்பட்டு இருக்கும் குறைகளை கூறினார். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அவ்வாறே செய்வோம் குறையில்லாமல் ஆட்சியை நடத்துவோம் என்றும் தெரிவித்தார். சிறு தொழில் கடைகள் இடம் திமுக பிரமுகர்கள் பலர் மிரட்டி காசு வாங்குவதாக தொடர்ந்து புகார் வருவதாகவும் கூறினார். இதனையெல்லாம் முதலமைச்சர் கவனித்து கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.