அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!!

Photo of author

By Parthipan K

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!!

முன்னாள் அமைச்சர் அதிமுக தலைவரான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார்.சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.அதன் பின் தன்னுடைய வயது முதிர்வின் காரணமாக அவர் அதிமுக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி விட்டார்.இதனை அடுத்து சென்னை தண்டையார்ப் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு வந்தார்.

இருப்பினும் அவரது உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்த நிலையில் அவைத் தலைவரான மதுசூதனின் உடல்நிலை திடீரென படும் மோசமாகிவிட்டது இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பதை மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.தற்போது அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 24 மணி நேரமும் அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நிலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அதிமுக கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.