அதிமுக செயற்குழுவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று எல்லாத் தரப்பினரும் தெரிவித்து வந்தார்கள். அதை உளவுத்துறையினரும் ஆளும்கட்சினரின் மேலிடத்திற்குத் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் திடீர் திருப்பமாக கட்சித் தலைமைப் பதவியில் இருக்கின்ற இருவரும் ஒன்றாக கைகோர்த்து அந்த பதவிக்கு தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். இதனை பார்த்து ஆளும்கட்சி தரப்பு மற்றும் சசிகலா தரப்பு உள்ளிட்டோர் அதிர்ச்சியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த இருவரும் கைகோர்த்து செயல்படுவதே நமக்கு நல்லது தான் என்று ஆளும் கட்சியினரும் நிம்மதி அடைந்தார்கள். ஆனால் ஒட்டு வேலை தான் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையில் மனதளவில் ஒற்றுமை ஏற்பட வில்லையாம். அந்த இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்தாலும் இன்னொருவர் இறங்கிவர மறுக்கிறாராம் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள் அந்த இருவரில் ஒருவரின் ஆதரவாளர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து பேசி முடிவெடுங்கள் மற்றவர்களை வைத்து விவாதிக்க வேண்டாம் என்று அவரிடம் அறிவுரையும் கூறியிருக்கிறார்கள். அதற்கு தேனிக்காரர் அவர்தான் முகம் கொடுத்து பேச மாட்டேன் என இருக்கிறார், பின்பு எப்படி அவருடன் பேசி பிரச்சனையை விவரிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறார். இப்போதைக்கு சசிகலா தரப்பு வருவதை தவிர்க்க தேனீக்காரருடன் சேலத்து காரர் வேறு வழியில்லாமல் கைகோர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது.