ஆபத்தான் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

0
198

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட இருக்கின்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது. அந்த விதத்தில், தமிழ்நாட்டிலும் இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 56 வயது நபர், இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமி மற்றும் 32 வயது பெண் என்று மூன்று பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களில் 32 வயது பெண்ணுக்கு மறுபடியும் மேற்கொண்ட பரிசோதனைகளில் நோய் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததால் அவர் கும்பகோணத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த 43 வயது நபர் ஒருவருக்கு செய்த சோதனையிலும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து திடீரென்று மாயமான அவரை நாகர்கோவிலில் இருக்கின்ற அவருடைய வீட்டில் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேருக்கும் மேற்கொண்ட முதற்கட்ட பரிசோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. டெல்டா வகை பாதிப்பு தான் இருக்கிறது என்றும், கூறியிருக்கிறார் மா. சுப்பிரமணியன்.

ஆனாலும் அபாயகரமான நாடுகளிலிருந்து இவர்கள் வந்திருப்பதால் இவர்களுடைய மாதிரிகள் பெங்களூருவில் இருக்கின்றன இன்ஸ்டால் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இறுதி முடிவு வந்துவிடும் என்று தெரிவித்ததோடு பராமரிப்புக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் 200 இல் இருந்து 300 படுக்கைகள் தற்போது தயாராக இருக்கின்றன. ஒமைக்ரான் வைரஸ் 30 நாடுகளுக்கு மேல் பரவி இருக்கிறது. இதில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையோ, அவசியமில்லை என்று தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 80.44% நபர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி 47.46% நபர்களும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில், இன்று முதல் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஐம்பதாயிரம் பகுதிகளில் நடைபெற இருக்கிறது இதுவரையில் நடைபெற்ற 13 தடுப்பு முகாமில் 2 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

Previous articleமீண்டும் பதவி ஏற்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்! முறைப்படி இன்று வெளியாகும் அறிவிப்பு!
Next articleகைகள் இனைந்தும் மனங்கள் இணையாத நிலையில் அதிமுக தலைமை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here