அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது?
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இதனை தீர்க்க அதிமுக அரசு இந்த திட்டத்தை அப்போதே கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டது.தற்போது ஆட்சி மாற்றம் அடைந்த நிலையில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்துமாறு திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.திமுக அரசுக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லை என அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் செயல்படுத்த கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை திமுக அரசு தற்போது அலட்சியப்படுத்தி வருகிறது.இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதனைதொடர்ந்து மூடு விழா நடத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதனால் அப்பகுதியில் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார்கள் குவிந்து வருகின்றனர்.இந்த போராட்டம் காரணமாக அதிமுக கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர்.