அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!!

Photo of author

By Savitha

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!!

வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர் பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வழக்குகள் என பல்வேறு இடர்பாடுகளைக் வெற்றியுடன் கடந்து, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு,அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டின் பேரில் உலகப் பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையான இன்று நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தை ஒட்டி குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை, தேவியருடன் வெள்ளித்தேரில் எழுந்தருளச் செய்தனர்.

வெள்ளித்தேர் உற்சவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனி, உள்ளிட்ட ஏராளமான அதிமுக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு குமரக்கோட்டம் முருகன் அருளால் எடப்பாடி பழனிச்சாமி நீடுழி வாழ வேண்டி கோஷமிட்டு வெள்ளித்தேரினை வடம் பிடித்து கோவில் வளாகத்தில் இழுத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்து வணங்கினார்கள்.

பின்பு வெள்ளித்தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்னதானத்தையும் வழங்கினார்கள்.