அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய குலுக்கல் முறையில் முன்னுரிமையை தாங்களாகவே தேர்வு செய்து கொண்ட பரந்தூர் கிராம விவசாயிகள்!!

0
140
#image_title

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய குலுக்கல் முறையில் முன்னுரிமையை தாங்களாகவே தேர்வு செய்து கொண்ட பரந்தூர் கிராம விவசாயிகள்.

விவசாயிகளுக்குள் போட்டா போட்டி பகைமை வளராமல் தடுக்க முன்மாதிரியாக செய்த செயலால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்கள் பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 126 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட கிராமப்புறங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெற்பயிற் அதிகம் விளையும் இடமான பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரை பயிரிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக்கி உள்ளனர்.

மேலும் சில விவசாயிகள் அறுவடை செய்யவும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் கிராம பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் கிராமப் பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடும் விவசாயிகள் உள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை விற்பனை செய்வதில் போட்டோ போட்டி ஏற்படும்.இதன் காரணமாக விவசாயிகளுக்குள் சண்டை, சச்சரவுகளும், பகையும் ஏற்படும் சூழல் உள்ளது.

அதனால் பரந்தூர் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே ஒன்று கூடி முன்மாதிரியாக சிறிய விவசாயிகள், பெரிய விவசாயிகள், என்ற பாகுபாடு ஏதுமின்றி நெல்லை விற்பனை செய்வதில் போட்டோ போட்டி ஏற்படாத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் நோட்டுப் புத்தகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, முன்மாதிரியாக குலுக்கல் முறையில் 1வது யார்,2வது யார்,3வது யார், என வரிசையாக நெல் விற்பனை செய்வதற்கான முன்னுரிமையை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

ஆங்காங்கே அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு வரும் நிலையில் பரந்தூர் கிராம விவசாயிகள் முன்மாதிரியாக செயல்பட்டு ஒற்றுமையுடன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்பனை செய்ய செய்து கொண்ட குலுக்கல் முறை, அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியினையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha