கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!

Photo of author

By Anand

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!

கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுவை பெற்றார். அப்போது ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அப்பொழுது எந்த ஒரு நிர்வாகிகளும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொண்டிருந்தனர்.

இதனால் கொரோணா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் ஒருவர் கூட முக கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் கடந்த ஒரு வாரமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் அபராதம் விதித்து வருகிறார்.

இந்நிலையில் முககவசம் அணியாமல் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்றர்.வியாபாரிகளை குறிவைத்து வரும் தாசில்தார் அரசியல்வாதிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார். கெங்கவல்லி பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரிகளும் அவர்கள் மீது அபராதம் விதிப்பது இல்லை.

இந்நிலையில் முககவசம் அணியாமல் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்றனர்..வியாபாரிகளை குறிவைத்து வரும் தாசில்தார் அரசியல்வாதிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார். கெங்கவல்லி பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரிகளும் அவர்கள் மீது அபராதம் விதிப்பது இல்லை.