துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

0
254

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!
ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார்.

நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, மருந்து, மாத்திரைகள் சேதப்படுத்தியும், மருத்துவ ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டிருந்தது. தவிர, மருத்துவ உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதுகுறித்து செவிலியர் வினிதா அளித்த புகாரின்பேரில், ஆத்துார் ஊரக போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகாங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு!
Next articleகொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here