2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆளும் திமுக அரசின் குறைகளை அனுதினமும் மக்களிடத்தில் எடுத்து சென்று திமுக கட்சியின் ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதனால் அரசியல் மேடையில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன.
அண்மையில் அதிமுக கட்சியை சேர்ந்த சி.வி.சண்முகம் அவர்கள் மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனுடன் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவது தவறு என்றும், உங்களுடன் ஸ்டாலின், உங்களுக்காக ஸ்டாலின் போன்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆட்சியில் இருக்கும் கட்சி முதல்வரின் பெயரில் திட்டத்தை அறிவிக்காமல் வேறு யாருடைய பெயரை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லையென்றும், கோர்ட் நேரத்தை வீணடித்ததால் தமிழக அரசுக்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.சண்முகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆளும் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.