News

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதாவது சேலம் புறநகர் சிவகங்கை நெல்லை போன்ற மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட காரணத்தால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் மற்றும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


அதாவது சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வரும் சேலம் புறநகர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த புரட்சி தலைவி பேரவை இணைச் செயலாளர் ஆர் சரவணன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சண்முகப்பிரியா,

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவர் அணிச் செயலாளர் சுந்தர்ராஜன், உள்ளிட்டோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் கொண்டு அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

இந்த ராசிக்கு உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன் 25-06-2021 Today Rasi Palan 25-06-2021

Leave a Comment