இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!?

0
196

இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!?

 

சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து  இன்று மதியம் இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதைதொடர்ந்துமனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணை நடந்தது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இது தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

மேலும்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது யார் பொதுக்கூடவே கூட்டம் அதிகாரம் கொடுத்தார்? ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாத? அந்தப் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?

பொதுக்குழு நடத்துவதற்கு  எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? பொதுக்குழுவை கூட்ட தமிழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்விகளை எழுப்பினார். மேலும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். விசாரணையின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர உரிமையுள்ளது .மேலும்  ஓபிஎஸ் தரப்பும் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடலாம் என்றனர். இதனை இபிஎஸ் தரப்பு எதிர்த்து விவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleகுரு பகவான் கொடுக்கும் யோகங்களின் சிறப்பம்சங்கள்!
Next articleஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு!