அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

0
59
Edappadi Palanisamy with Actor Vijay
Edappadi Palanisamy with Actor Vijay

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே.

ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு நிலவியது. ஆனால் ஆட்சியில் பங்கு விஜய்க்கு முதல்வர் பதவி உள்ளிட்ட நிபந்தனைகளால் இது பேச்சு வார்த்தைகளுடன் முடிந்தது. இந்நிலையில் பிரிந்திருந்த பாஜக அதிமுக கூட்டணியானது மீண்டும் உருவாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் கிளம்பியுள்ளது.

தற்போதைய சூழலில் தவெக தனியாக போட்டியிட்டால் தமிழகத்தில் அதிமுக, திமுக, நாதக மற்றும் தவெக என நான்கு முனை போட்டியே உருவாகும். இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் தவெக  வருமா மற்றும் அதன் அரசியல் பாதிப்புகள் என்னவென்று அதிமுக வினா முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Rajendra Balaji TVK VIjay Alliance

அதில் தவெக தனியாக போட்டியிட்டால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் அக்கட்சிக்கு போகும் எனவும், எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டுமல்லாமல் திமுக ஓட்டுக்களே தவெக கட்சிக்கு போகும் என்றும் கூறியுள்ளார். அதே போல அதிமுக மற்றும் மீதுள்ள கட்சியிலிருக்கும் இளைஞர்கள் ஓட்டுக்களும் தவெக கட்சிக்கு போகும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதிகம் பாதிக்கப்பட போவது திமுக தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் எங்களுக்கு லாபம் என்றும், அத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்றே பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இது குறித்து தங்களது தலைமைக்கு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் பக்குவமடைந்த தலைவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் மீண்டும் அதிமுக தவெக கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும் என்றே கருதப்படுகிறது.

Previous articleசமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!
Next articleமாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!