அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

0
77

நேற்று அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சிலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வன்னியர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற தகராறு காரணமாக, பொன்விழா ஆண்டை கொண்டாடும் நேரத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது 2வது நாளாக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற மோதல் குறித்து சுமார் 400 பேர் மீது 3 தனி, தனி பிரிவுகளின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகாரின் பேரில் பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீதும், பழனிச்சாமி ஆதரவாளர்கள் புகாரின் பேரில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்க்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஆவணங்களை திருடி சென்றதாக பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், jcd பிரபாகர், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது.

300 ரவுடிகளுடன் அத்துமீறி நுழைந்து கதவை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றதாகவும், காவல்துறையில் வழங்கிய புகாரில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தெரிவித்திருக்கிறார்.