அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்?
அதிமுக முன்னாள் அமைச்சருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேர்முகம் உதவியாளராக இருந்தவர் நடுவப்பட்டி மணி என்பவர். இவருடைய வயது 55. அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இல்நிலையில் பண மோசடியில் ஈடுபட்ட அவரை குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமியிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.புகார் மனுவில் கடந்த ஆண்டு நடுவப்பட்டி மணி ரேசன் கடைகளில் தனது உறவினர்கள் இரண்டு பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.எட்டு லட்சம் வாங்கி இருக்கின்றார்.
அத்துடன் கையோடு வேலையும் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கேட்டிகொண்டார்கள்.
இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டார்.அதன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிமுக தொண்டைகளுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.