திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

Photo of author

By Sakthi

அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதிலிருந்தே தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஒருபுறம் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதும் முடிப்பதுமாக இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கிறார்.

மறுபுறமோ சமீபத்தில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலை சந்திக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய பங்கு இந்தத் தேர்தலில் முக்கியமானதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல திமுகவும் ஆளும் கட்சியான அதிமுகவை விழுத்தி சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அமரவேண்டும் என்று முழு மூச்சாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவில் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவின் கூட்டணியை விட்டு வெளியே சென்று மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கின்றது. அதேபோல திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி அந்தக் கூட்டணியை விட்டு வெளியே சென்று அந்த கட்சியும் கமல்ஹாசனுடன் இணைந்து இருக்கிறது.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்பது கமல்ஹாசன் ரூபத்தில் உருவெடுத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கமலஹாசன் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரு கணிசமான வாக்குவங்கி இருப்பதாகவே நம்பப்படுகிறது. அப்படியிருக்கையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் பிரிந்து சென்று கமல்ஹாசனுடன் ஒன்றிணைந்து இருப்பது அனைவராலும் உற்றுநோக்க பட்டுக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் அதிமுகவும், திமுகவும் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் இங்குதான் ஆளும் கட்சியான அதிமுகவின் அரசியல் சித்து விளையாட்டு ஆரம்பமாகி இருக்கிறது என்பதுதான் உண்மையான நிலை.

என்னதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் கணிசமான வரவேற்பு இருந்தாலும் கூட திமுகவிற்கு அநேக இடங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

ஆம் பெரிய அளவில் பல மற்ற ஒரு சில கட்சிகளை வைத்து தனியாக ஒரு கூட்டணி அமைத்து அதன் மூலம் பிரச்சாரம் செய்தால் திமுகவிற்கு செல்லும் ஓட்டுக்களை தடுத்து விடலாம் என்பதே ஆளுங்கட்சியின் கணக்காக இருந்து வருகிறது.

இதே கணக்கை தான் கடந்த இரண்டாயிரத்தி பதினோராம் ஆண்டு ஜெயலலிதா போட்டு இருந்தார். அவருடைய அந்த கணக்கு கன கச்சிதமாக பொருந்தி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்.

பின்பு அதே வியூகத்தை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் செயல்படுத்தினார் அதில் வெற்றியும் கண்டார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அதோடு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது அதிமுக இருந்தாலும் கூட அதிமுக திமுகவுடன் நேருக்கு நேர் சந்தித்த எல்லா தொகுதிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரித்திர வாக்குகளை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் திமுகவை தவிர்த்துவிட்டு இதர சிறிய கட்சிகளுடன் நேருக்கு நேர் நின்று போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றார்கள். அதோடு அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. இதனை முன்பே கணித்து இருந்த ஜெயலலிதா அதனை கனகச்சிதமாக செயல்படுத்தி அதில் சரித்திர வெற்றியையும் பெற்றிருந்தார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு மற்றும் 16ஆம் ஆண்டுகளில் செயல்படுத்திய தேர்தல் நிதியை தான் தற்சமயம் எடப்பாடி கையிலெடுத்து இருக்கிறார். ஆகவே திமுக கூட்டணியில் இருக்கின்ற சிறிய கட்சிகளை பிடித்து அதன் மூலம் அந்த கட்சிக்கு செல்லவிருக்கும் வாக்குகளை சிதறடித்து அதன்வழியாக வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியில் அமர்வது எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதோடு அந்த திட்டத்தில் ஏறத்தாழ எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அறிந்த திமுகவின் தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக்கொண்டு திரிவதாக சொல்கிறார்கள்.

சுமார் ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பெல்லாம் கமல்ஹாசன் முதல்வர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் அவரும் சென்று முதல்வருக்கு எதிரான பல கருத்துக்களை முன்வைத்து அவரை விமர்சனம் செய்து இருக்கிறார். ஆனால் அவரை மையமாக வைத்து தன்னுடைய வெற்றிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதைப்பற்றி அதிமுகவின் நிர்வாகிகளிடம் விசாரித்தால் திரைப்படத்தில் வரும் வசனத்தை போல இது காலத்தின் கட்டாயம் என்று ஒரு வரியில் முடித்து விடுகிறார்கள். ஆகவே இந்த முறையும் அதிமுக ஆட்சியில் அமரும் என்பதே அனேக மக்களின் கருத்தாகவும், மானஎண்ணமாக இருந்து வருகிறது.