M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

Photo of author

By Parthipan K

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது எனவும் கூடவே ஓராண்டு சிறப்பு பயிற்சியை முடித்தால் மட்டுமே தகுதி உடையவர்களாக பணியாற்ற ‌முடியும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது
பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., முடித்திருந்தாலே போதுமானது என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய விதிகளின்படி எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்குப் பிறகு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள 8 Module Course என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கனவே பேராசிரியராகப் பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணிபுரிவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மோடி பிரதமராக பின்பு கல்வி துறையில் அதிரடியாக பல சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது, பல பொறியியல் கல்லூரிகள் முளைத்து கொண்டே இருக்கின்றன, ஆண்டுதோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகளாக தகுதி பெற்று வருகின்றனர்! தற்போதைய காலகட்டத்தில் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளில் பொறியியல் பட்டம் படித்தவர்கள் தான் முதலிடம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்